×

வித்யா பாலன் பெயரில் மோசடி

 

மும்பை: போலி கணக்குகளை தொடங்கி நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி செய்த நபர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகை வித்யா பாலனின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக மும்பை காவல்துறையிடம் வித்யா பாலன் புகார் அளித்தார். அதையடுத்து போலி ஐடியை உருவாக்கிய அடையாளம் தெரியாத நபர் மீது தகவல் தொழில்நுட்பத்தின் 66 (சி) பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

The post வித்யா பாலன் பெயரில் மோசடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vidya Balan ,Mumbai ,Instagram ,Bollywood ,Mumbai, Maharashtra ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...