×

யாமி கவுதம், பிரியாமணி நடித்த ஆர்டிக்கிள் 370

மும்பை: இந்தியில் யாமி கவுதம், பிரியாமணி நடித்திருக்கும் ‘ஆர்டிக்கிள் 370’ படம், வரும் 23ம் தேதி ரிலீசாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளர் ஆதித்யா தர் கூறியதாவது: இப்படம் சரியான நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை.

குறிப்பாக, குறிப்பிட்ட நோக்கத்துக்காக விமர்சிப் பவர்களை நான் கண்டுகொள்வதே இல்லை. விமர்சகர்கள் சொல்வது போல், இதை ஒரு பிரச்சார படமாக நான் நினைக்கவில்லை. அவர்களின் எண்ணம்தான் இப்படத்தை பிரச்சார படமாக பார்க்க வைக்கிறது. ‘ஆர்டிக்கிள் 370’ என்பது இந்தியாவை மையப்படுத்திய படம். இது ஒரு ஆச்சரியமான கதை. இதுவரை நான் கேட்டதிலேயே மிகச்சிறப்பான கதை என்று சொல்வேன்.

 

The post யாமி கவுதம், பிரியாமணி நடித்த ஆர்டிக்கிள் 370 appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yami Gautam ,Priyamani ,Mumbai ,Aditya Dhar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஏர்போர்ட், ஜிம், ஓட்டல்களில்...