இல்லத்தரசிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!: சென்னையில் ரூ.38 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை.. சவரன் ரூ.37,896-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.37,896-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்று நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தங்கம் சவரனுக்கு ரூ.472 குறைந்து, ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலையானது அதிரடியான சரிவை கண்டிருக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.18 குறைந்து 4,737 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37,896 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசு அதிகரித்து ரூ.63.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்….

The post இல்லத்தரசிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!: சென்னையில் ரூ.38 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை.. சவரன் ரூ.37,896-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: