பெரம்பலூர் மாவட்டத்தில் 8 நாட்களாக 100 டிகிரியை தாண்டியது சுட்டெரிக்கும் வெயில் பொதுக்கள் திண்டாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக 100 டிகிரிக்கு மேலாக சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.தமிழகத்தின் மையத்தில் உள்ள மிகச்சிறிய வறண்ட மாவட்டம் பெரம்பலூர் மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் நிரந்தர நீரோட்டமும் நீர் வளமும் கொண்ட ஆறுகளோ, ஏரிகளோ இல்லாத நிலையில் மாவட்டத்தின் மேற்கு, வடமேற்கு எல்லைகளாக பசுமையை போர்த்தியுள்ள பச்சைமலை தொடர்ச்சி நீண்டிருந்தும் வெப்பத்தை தணிக்க வழியின்றி மக்கள் வேதனைக்கு உள்ளாகும் நிலையே ஏற்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதம் வந்தால் மட்டுமே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த ஒருவருடமாக மார்ச் மாத தொடக்கத்திலேயே மண்டையைப் பிளக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் இதுவரை 22 நாட்களுக்குள் 12 முறை 100 டிகிரிக்குமேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக திருச்சி மண்டல பொதுப்பணித்துறையின் (நிலநீர்ப்பிரிவு) வானிலை ஆய்வுமைய கணக்கீட்டாளர் நடனகோபால், பெரம்பலூர் மாவட்டத்தில் தினமும் நிலவுகிற வெப்பநிலையை கணக்கிட்டு வெளியிட்ட விபரப்படி ஏப்ரல் மாதத்தில் 1ம்தேதி 38.5 செல்ஷியஸ் வெப்பம், அதாவது 99.3 டிகிரி வெப்பமும், 2ம் தேதி 39 செல்ஷியஸ் வெப்பம், அதாவது 100.2 டிகிரி வெப்பமும், 3ம்தேதி 100.2 டிகிரியும், 4ம்தேதி 99.3 டிகிரியும், 5ம்தேதி 98.4 டிகிரியும், 6ம் தேதி 100.2 டிகிரியும், 7ம் தேதி 100.2 டிகிரியும், 8ம் தேதி 98.4 டிகிரியும், 9ம்தேதி 98.4 டிகிரியும், 10ம்தேதி 92.1 டிகிரியும், 11ம்தேதி 92.1 டிகிரியும், 12ம்தேதி 92.1 டிகிரியும், 13ம் தேதி 94.8 டிகிரியும், 14ம் தேதி 98.4 டிகிரியும், 15ம் தேதி 101.1 டிகிரியும், 16ம்தேதி 102 டிகிரியும், 17ம் தேதி 102.9 டிகிரியும், 18ம் தேதி 102 டிகிரியும், 19ம் தேதி 103.8 டிகிரியும், 20ம் தேதி 102 டிகிரியும், 21ம் தேதி 100.2 டிகிரியும், நேற்று 22ம் தேதி 100.2 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது.குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் மட்டுமே சாதாரணமாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாவது வழக்கம். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 15ம்தேதி முதல் தொடர்ந்து 8 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம்பதிவாகி வருவது மக்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது. இதன் காரணமாக வேர்க்குரு, அக்கி, அரிப்பு உள்ளிட்ட அலர்ஜியால் ஏற்படும் உடல் உபாதைகளால் மக்கள் அவதிப்படுவதோடு, சிறிது நேரம் மின் வெட்டு ஏற்பட்டால் கூட புழுக்கம் காரணமாக தூக்கமின்றித் தவித்து வருவது வாடிக்கையாகவிட்டது. இதனால் மக்கள் கோடை மழையின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.தர்பூசணி, முழாம்பழம், இளநீர், மோர், சர்பத், ஐஸ்கிரீம் உள்ளிட்ட குளிர்பானங்களை, குளிர்ச்சியான உணவு பொருட்களை சாப்பிட்டு சமாளித்து வருகின்றனர்….

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 8 நாட்களாக 100 டிகிரியை தாண்டியது சுட்டெரிக்கும் வெயில் பொதுக்கள் திண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: