சமயசங்கிலி கதவணையில் பராமரிப்பு பணி: மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் சப்ளை

பள்ளிபாளையம்: சமயசங்கிலி கதவணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நடு ஆற்றிலிருந்து நான்கு மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சி சப்ளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் நகராட்சி மக்களுக்கு தேவையான தண்ணீரை, ஆவத்திப்பாளையம் காவிரி ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து எடுத்து, அக்ரஹாரம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தப்படுத்தி குழாய் மூலம் 21 வார்டுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்கும் பணிக்காக காவிரி ஆற்றிலிருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்தப்படுத்தி, 8 குடிநீர் மேல்நிலை தொட்டிகளில் ஏற்றி குழாய் மூலம் ஒரு நபருக்கு 112 லிட்டர் சுத்தப்படுத்திய குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, சமயசங்கிலி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் 15 நாட்கள் நடைபெறும். இதனால், தடுப்பணையிலிருந்து தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளிபாளையம் நகராட்சியின் நீரேற்று நிலையம் வறண்டு காணப்படுகிறது. எனவே, தற்போதைய தேவையை நிறைவேற்ற ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்திலிருந்து, குழாய்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து, நீரேற்று நிலையத்திற்கு அனுப்ப, 10 குதிரை சக்தி திறன் கொண்ட 4 மின் மோட்டார்கள் இடைவிடாது இயங்கி தண்ணீரை நீரேற்று நிலையத்திற்கு அனுப்பி வருகின்றன. இந்த பணிகளை நகரமன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், ஆணையாளர் கோபிநாத் ஆகியோர் நேற்று பார்வையிட்டு துரிதப்படுத்தினர்….

The post சமயசங்கிலி கதவணையில் பராமரிப்பு பணி: மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் சப்ளை appeared first on Dinakaran.

Related Stories: