தஞ்சை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி மீண்டும் மும்முரம்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் கல்லணை கால்வாயில் புனரமைப்பு பணிகள் மீண்டும் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது.கல்லணையில் தொடங்கி தஞ்சை, பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகள் பாசனம் பெற உதவுவது கல்லணை கால்வாய் ஆகும். கடைமடை வரை தண்ணீர் சென்று அடைய வசதியாக கல்லணை கால்வாய் பயன்படுகிறது. இந்த கல்லணை கால்வாயை சீரமைத்து நவீனப்படுத்துதல் பணிகள் கடந்தாண்டில் தொடங்கப்பட்டது.அப்போது மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படாததால் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. கல்லணை கால்வாயின் இரு கரைகளையும் சீரமைத்து கான்கிரீட் சாய் தளம் அமைப்பதற்கு வசதியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தரை தளங்கள் அமைக்க சமப்படுத்தும் பணிகளும் நடந்தன.இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்தாண்டு ஜூன் மாதம் மேடூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கல்லணைக்கால்வாயில் புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. குறுவை அறுவடை முடிந்து மீண்டும் சம்பா, தாளடி சாகுபடிக்காக மேடூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லை என்பதால் மீண்டும் கல்லணைக் கால்வாயில் புனரமைப்பு பணிகள் மும்முரம் அடைந்து வருகிறது.இதில் தஞ்சை அருகே வண்ணாரப்பேட்டை, ரெட்டிப்பாளையம் பகுதிகளில் கல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கரைகள் பலப்படுத்துதல், தேவையான இடங்களில் தரைத்தளம் அமைக்க தேவையான நடவடிக்கை என்று பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது….

The post தஞ்சை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி மீண்டும் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: