தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 5 மாநகராட்சிகள், 17 நகராட்சிகள், 65 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி முன்னிலை!!

சென்னை:தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. மாநகராட்சிகளில் 4 பேர், நகராட்சிகளில் 18 பேர், பேரூராட்சிகளில் 196 பேர் என 218 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். 21 மாநகராட்சிகளில் 5ல் திமுக கூட்டணி  முன்னிலை வகிக்கிறது. 138 நகராட்சிகளில் 17ல் திமுக கூட்டணியும் 1ல் அதிமுகயும் 1ல் பிற கட்சிகளும் முன்னிலை வகிக்கிறது. 438 பேரூராட்சிகளில் 65ல் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 21 மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 6 இடங்களில் தேர்வாகி உள்ளது. 138 நகராட்சிகளில் 3,842 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 16 இடங்களிலும் மற்ற கட்சிகள் 8 இடங்களிலும் தேர்வாகி உள்ளது. 489 பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 122 இடங்களிலும் அதிமுக கூட்டணி 15 இடங்களிலும் மற்ற கட்சிகள் 107 இடங்களிலும் தேர்வாகி உள்ளது. எந்தெந்த வார்டுகளில் திமுக வெற்றி ?கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சியில் திமுக 1 மற்றும் 2வது வார்டில் வெற்றி பெற்றுள்ளது.  3வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பழனி கீரனூர் பேரூராட்சியில் 2 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் முதலாவது மற்றும் இரண்டாவது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திருச்சி மாவட்டம் கூத்தைபார் பேரூராட்சி 1வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் கவிதா வெற்றி பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட, பொன்னமராவதி பேரூராட்சி 1வது வார்டு நாகராஜன்(திமுக) வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெயராணி வெற்றி பெற்றுள்ளார்.  2 வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் லட்சுமி வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சி 1வது வார்டில் திமுகவின் ஞானசுந்தரியும், 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் பழனிவேல் வெற்றி பெற்றுள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்குடி பேரூராட்சியில் திமுக வேட்பாளர்களான 1வது வார்டு  இலக்கியா மாரியப்பன் மற்றும் 2 வது வார்டு கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். …

The post தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 5 மாநகராட்சிகள், 17 நகராட்சிகள், 65 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி முன்னிலை!! appeared first on Dinakaran.

Related Stories: