பூத் ஏஜென்ட் கவனக்குறைவால் பரபரப்பு ஒன்றிய அமைச்சரின் பெயரில் வேறு ஒருவர் வாக்குப்பதிவு: அமைச்சர் எல்.முருகன் அதே வாக்கு சாவடியில் வாக்களித்தார்

சென்னை:  ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு அண்ணா நகர் கிழக்கு டி.பி.சத்திரத்தில் குஜ்ஜி தெருவில் உள்ள சென்னை நடுநிலை பள்ளியில் வாக்கு உள்ளது. இந்த நிலையில், ‘நேற்று மதியம் எல்.முருகன் வாக்கை வேறு ஒரு நபர் கள்ள ஓட்டாக போட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?’  என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் அங்கு பெரிய அளவில் பேசப்பட்டதையடுத்து, வாக்குப்பதிவு மைய  ஏஜென்ட்டுகளிடம் டி.பி.சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அதே வாக்குச்சாவடியில் 2 முருகன் பெயர்கள் பட்டியலில் இருந்ததும், பி.முருகன் என்பவர் வாக்குப்பதிவு செய்ய வருகையில், வாக்குப்பதிவு மைய ஏஜென்ட்டுகள் தவறுதலாக இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் அவரது வாக்கை பதிவு செய்துவிட்டனர். இதனால், எல்.முருகன் பெயரில் பி.முருகன் என்பவர் வாக்கு பதிவு செய்துவிட்டு சென்றுள்ளார். வாக்குப்பதிவு மைய ஏஜென்ட் தவறுதலாக பி.முருகனுக்கு பதிலாக எல்.முருகனை டிக் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தில், யார் மீதும் தவறில்லை என்றும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எந்த இடையூறும் இல்லாமல் மாலை வாக்கு பதிவு செய்வார் என்று அதிகாரிகள், போலீஸ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை 5 மணியளவில் அதே வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்….

The post பூத் ஏஜென்ட் கவனக்குறைவால் பரபரப்பு ஒன்றிய அமைச்சரின் பெயரில் வேறு ஒருவர் வாக்குப்பதிவு: அமைச்சர் எல்.முருகன் அதே வாக்கு சாவடியில் வாக்களித்தார் appeared first on Dinakaran.

Related Stories: