கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டையாக மாறும் இந்தியாவுக்கே ரோல் மாடலாக முதல்வர் விளங்குகிறார்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பேச்சு

சென்னை: கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டையாக மாறும். இந்தியாவுக்கே முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோல் மாடலாக விளங்குகிறார் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்தார். இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறியதாவது: கடுமையான நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரண நிதியை வழங்கிய முதல்வர் என்று மக்கள் பாராட்டுகின்றனர். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தின் முக்கியமான அங்கமாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி கடுமையான நிதி நெருக்கடியிலும் கடனை தள்ளுபடி செய்த ஒரு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். மக்களின் பொதுநலம் தான் உங்களின் சுயநலம் என்று மக்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே திமுக கொடி பட்டொளி வீசி பறப்பதைப் போல், நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கொடி பட்டொளி வீசி பறக்கும் என்பது உறுதி. 100% வெற்றியை பெற்று உங்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கக்கூடிய சபதத்தை ஈரோடு மாவட்ட மக்கள் சார்பில் நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள். ஓய்வறியா உழைப்பாளி நீங்கள். உங்களுடைய உழைப்பிற்கு கட்டாயம் பலன் கிடைக்கும். ஈரோடு மாவட்டம், கொங்கு மண்டலம், திமுகவின் கோட்டையாக மாற வேண்டும் என்ற உங்களுடைய கனவு, இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம் சாத்தியப்படும்.  உங்களை விளம்பரம் தேடிக் கொள்ளும் முதல்வர் என்று கூறுகிறார்கள். ஆனால் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், உங்கள் நடவடிக்கைகளை பார்த்து பல இடங்களில் பின்பற்றிவருகிறார். பொதுமக்களைப் பொறுத்தவரையில் நீங்கள் விளம்பர முதல்வர் அல்ல. இந்தியாவிற்கே ரோல் மாடல் முதல்வராக விளங்கிகொண்டு இருக்கிறீர்கள். இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் பேசினார். …

The post கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டையாக மாறும் இந்தியாவுக்கே ரோல் மாடலாக முதல்வர் விளங்குகிறார்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: