என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி கையாளும் பயிற்சி

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த என்சிசி மாணவ, மாணவியருக்கு துப்பாக்கிகளை கையாளும் பயிற்சி ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்ட 31வது தமிழ்நாடு அணி என்சிசி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள நஞ்சநாடு, எடக்காடு, மஞ்சூர் அரசு பள்ளிகள் மற்றும் ஏகலைவா பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த என்சிசி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் ‘ஏ’ எழுத்து தேர்வு ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. நீலகிரி மாவட்ட தமிழ்நாடு தனி அணி என்சிசி அணியின் கமாண்டர் கர்னல் சீனிவாசன் தலைமை தாங்கி எழுத்து தேர்வினை துவக்கி வைத்தார். இதில், 375 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு, 125 மதிப்பெண்களுக்கு வரைபடம் விளக்கமளித்தல், ராணுவ நடைபயிற்சி, துப்பாக்கி கையாளும் பயிற்சி, உடல் தகுதி தேர்வு என மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. இத்தேர்வுகளில் 250 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதில், சுமார் 130க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ, மாணவியர், என்சிசி அலுவலர்கள் சுப்பிரமணியன், காமராஜ், சீனிவாசன், பசுவதேவன், பல்வீர்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி கையாளும் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: