×

தனியார் காப்பகத்தில் தொட்டிலில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழப்பு

அண்ணாநகர், ஆக.3: தனியார் காப்பகத்தில் தொட்டிலில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். முகப்பேர் பகுதியில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைகள், குப்பை தோட்டியில் வீசப்படும் குழந்தைகள் மீட்கப்பட்டு, இந்த காப்பகத்தில் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிருந்த 6 மாத ஆண் குழந்தைக்கு, காப்பகத்தில் பணிபுரியும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த பவானி (34) என்பவர், நேற்று முன்தினம் பால்புட்டியில் பால் கொடுத்து, தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, தொட்டிலில் இருந்து குழந்தை கீழே விழுந்து மயக்க நிலையில் கிடந்துள்ளது. உடனே, குழந்தையை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவலறிந்த நொளம்பூர் போலீசார் விரைந்து வந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து, தூக்கத்தில் குழந்தை தவறி கீழே விழுந்ததா அல்லது வேறு காரணமா என விசாரணை செய்து வருகின்றனர்.

The post தனியார் காப்பகத்தில் தொட்டிலில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் மண்டல தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்