ஜெயங்கொண்டம், ஆக. 3: ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் வந்து ஆடு திருடிச் சென்ற மூவரில் ஒருவர் சிக்கினார், இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஜெயங்கொண்டம் அடுத்த தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மாயவேல்(75). இவர், 7 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்ததால், ஆடுகளை வீட்டில் சுவர் ஓரமாக கட்டிவிட்டு, இரவு தூங்கினார். பின்னர் நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதும் மாயவேல் மற்றும் அவரது மகன் வெளியே வந்து பார்த்தனர் அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஆடுகளை தூக்கிச் சென்றனர்.
அதைக் கண்டதும் மாயவேல் சத்தம் போட்டதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதைக் கண்டதும் இருவர் ஆடுகளை தூக்கிக்கொண்டு பைக்கில் தப்பிசென்று விட்டனர். ஒருவர் மட்டும் ஆட்டுடன் கிராமத்தினரிடம் சிக்கினார். அவரை, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, மாயவேல் புகார் கொடுத்தார். விசாரணையில் ஆட்டுடன் பிடிபட்டவர் ஆண்டிமடம் விளந்தை காலனி தெரு, பெரியசாமி மகன் பழனிசாமி(23) என்பது தெரிய வந்தது. அதையடுத்து, சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கைது செய்து, ஆடுகளுடன் பைக்கில் தப்பிச்சென்ற இருவரை தேடி வருகின்றனர்.
The post ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் வந்து ஆடு திருடிய ஒருவர் கைது appeared first on Dinakaran.
