பாடாலூர், ஆக.1: பாடாலூரில் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட 2 அமைச்சர்கள் இன்று வருகை தருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருவளக்குறிச்சியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 60 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து இன்று (சனிக்கிழமை) ஆய்வு செய்வதற்காக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பாடாலூருக்கு வருகை தருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் செய்து வருகிறார்.
The post திட்டப்பணிகளை பார்வையிட பாடாலூருக்கு இன்று 2 அமைச்சர்கள் வருகை appeared first on Dinakaran.
