×

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ராஜிவ் காந்தி சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை, ஜூலை 31: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ராஜிவ் காந்தி சாலையில் நாளை(1ம்தேதி) காலை 8 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: ராஜிவ் காந்தி சாலையின் மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து டைடல் பார்க் சந்திப்பு வரையிலான மேம்பால கட்டுமானப் பணிக்காக அச்சாலையின் அகலம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை நேரங்களில் ராஜிவ் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. எனவே, காலை நேரங்களில் (8.30 மணி முதல் 11 மணி வரை) போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பின்வரும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படு
கிறது. தற்போதுள்ள போக்குவரத்து பாதைக்கு கூடுதலாக, மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து டைடல் பூங்கா நோக்கி செல்லும் வாகனங்கள், ‘எதிர் பாதையின்’ ஒரு பகுதி சாலையான (டைடல் பூங்காவிலிருந்து மத்திய கைலாஷ் வரை) பயன்படுத்தி வி.ஹெச்.எஸ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள யு-டர்ன் வரை சுமார் 300 மீட்டர் தூரம் செல்ல அனுமதிக்கப்படும். இந்த போக்குவரத்து ஏற்பாடு நாளை(1ம்தேதி) காலை 8.30 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே செயல்படுத்தப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ராஜிவ் காந்தி சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Road ,Chennai ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் மண்டல தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்