மாலத்தீவு சென்றடைந்தார் பிரதமர் மோடி: கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன் தினம் இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு மாலத்தீவு புறப்பட்டார். அவர் இன்று தனி விமானம் மூலம் மாலத்தீவு சென்றடைந்தார். 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.










Related Stories: