×

ரயிலிலும், ரயில் நிலையத்திலும் விற்பனையாளர்களுக்கு இனி அடையாள அட்டை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: ரயில்வே அமைச்சகம் நாடு முழுவதும் அனைத்து ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பல்வேறு சேவைகளை வழங்க உரிமம் பெற்ற நிறுவனங்களின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள், உதவியாளர்கள், ஊழியர்களுக்கு ரயில்வே நிர்வாகம் அல்லது ஐஆர்சிடிசியால் தரப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். அடையாள அட்டையில் ஊழியரின் பெயர், ஆதார் எண், மருத்துவ தகுதி சான்றிதழ் மற்றும் அதன் செல்லுபடியாகும் தேதி, காவல்துறை சரிபார்ப்பு தேதி, உரிமம் பெற்ற நிறுவனத்தின் பெயர் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

அந்தந்த நிலையத்தின் நிலைய கண்காணிப்பாளர் அல்லது நிலைய மேலாளர் அல்லது ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் கையொப்பம் இடம் பெற்றிருக்க வேண்டும். அடையாள அட்டையை காட்டாமல் விற்பனை செய்ய எந்த விற்பனையாளரும் அனுமதிக்கப்படக்கூடாது. இது உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ரயிலிலும், ரயில் நிலையத்திலும் விற்பனையாளர்களுக்கு இனி அடையாள அட்டை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Railway Ministry ,New Delhi ,Railway Administration ,Dinakaran ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்