×

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை..!!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 6 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து தென்பகுதியில் 400 கி.மீ. தூரத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் இடத்தில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்புப்படை வீரர்களுடன் இணைந்து போலீசார் கூட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடைபெற்ற சண்டையில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏ.கே. 47 துப்பாக்கி மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 18 மாதங்களில் 421 மாவோயிஸ்ட்டுகள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். மார்ச் 31, 2026க்குள் இந்தியா மாவோயிஸ்ட்டுகள் இல்லாத நாடாக மாறும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் உறுதியாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய மாவட்டங்களில் நாராயண்பூர் மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

The post சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Maoists ,Chhattisgarh ,Raipur ,Narayanpur district ,Abujmat ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...