×

சினிமா டிக்கெட் விலை ரூ.200 மேல் விற்ககூடாது: கர்நாடக அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பொழுதுபோக்கு வரியுடன் சேர்த்து டிக்கெட் கட்டணம் ரூபாய் 200க்கு மிகாமல் இருக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக சினிமா ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கை தியேட்டர்களின் டிக்கெட்டு ஏற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது. பெங்களூருவில் செயல்பட கூடிய தியேட்டர்களில் வாரநாட்களில் ஒரு கட்டணமும், வரம் இறுதி நாட்களில் ஒரு கட்டணம் என அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

அதாவது சாதாரணமான நாட்களில் 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும், நட்சத்திரங்களில் திரைப்படம் வெளியீட்டின் போது 1000 ரூபாய் வரையிலும் டிக்கெட்டுகள் விற்கபடுகின்றன. மல்டிபிள்ஸ் திரையரங்குகளில் சாதாரணமாகவே டிக்கெட் விலை 200 ரூபாய் தாண்டித்தான் இருக்கிறது. மேலும் ஐமேக்ஸ் உள்ளிட்ட தியேட்டர்களில் ஒரு திரைப்படத்துக்கு 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செயல்படுகிறது. இந்தநிலையில் தான் கர்நாடக மாநில அரசு 200 ரூபாய் தான் டிக்கெட் கட்டணம் என்ற நடைமுறையை கொண்டுவர இருக்கிறது.

கர்நாடக சினிமா விதிமுறைகள் 2014ல் இதற்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து தரப்பிலான மக்களும் சிரமம் இன்றி திரையரங்குக்கு சென்று வர பயனளிக்கும் விதமாக இந்த விதிமுறை திருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாடற்ற இந்த டிக்கெட் விலைகள் முடிவுகள் கொண்டுவர 2017ஆம் ஆண்டு தற்போதைய முதல்வர் சித்தராமையா முதல்வராக இருந்த போது இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து கர்நாடக உயர்நிதிமன்றத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் வழக்கை தொடர்ந்தனர்.

அப்போது இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தள்ளிவைக்கப்பட்டது. மேலும் 2021ஆம் ஆண்டு மல்டிபிள்ஸ் தியேட்டர்களுக்கு ஆதரவாக கர்நாடக உயர்நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐமேக்ஸ் தியேட்டர்களுக்கான விலை நிர்ணயத்தை தியேட்டர்காரர்களே அமைத்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தது. அது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து கர்நாடக உள்துறை துணை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கர்நாடகவில் இருக்கும் மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வரிகளையும் சேர்த்து ரூபாய் 200க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்க கூடாது.

இது கன்னடம் படங்களுக்கு மட்டுமல்லா அனைத்து மொழி படங்களுக்கு பொருந்தும். மல்டி பிலக்ஸாக இருந்தாலும் சரி, சிங்கள் ஸ்கிரீனாக இருந்தாலும் சரி இந்த விலையே என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது இந்த அறிவிப்பை சித்தராமையா வெளியிட்டு இருந்தார். தற்போது அதிகாரபூர்வமாக செயல்பாட்டுக்கு வரும் நிலையில் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சட்டம் விரைவு குறித்து 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க கர்நாடக அரசு கால அவகாசம் கொடுத்துயிருந்தது. இந்த கருத்து கேட்பிற்கு பிறகு இந்த புதிய திருத்தம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனை திரையரங்கம் உரிமையாளர்கள் எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பதையும் மற்ற மாநிலங்களுக்கும் இது மாதிரியான நடவடிக்கைகள் பரவுமா என்பதையும் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

The post சினிமா டிக்கெட் விலை ரூ.200 மேல் விற்ககூடாது: கர்நாடக அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Karnataka BANGALORE ,KARNATAKA GOVERNMENT ,KARNATAKA ,Dinakaran ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்