×

டெல்லி, அரியானாவில் இன்று நிலநடுக்கம்

புதுடெல்லி: டெல்லியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியானா மாநிலம், ஜஜ்ஜர் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.04 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. டெல்லி, காசியாபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதுவரை சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

The post டெல்லி, அரியானாவில் இன்று நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Delhi, Haryana ,New Delhi ,National Seismological Centre ,NSC ,Delhi ,Haryana ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...