×

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாதிப்பு கேரள பொறியியல் நுழைவுத் தேர்வு ரேங்க் பட்டியல் ரத்து: கேரள உயர்நீதிமன்றம் நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதற்கான ரேங்க் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ரேங்க் பட்டியலில் தங்களது மதிப்பெண் ஒருங்கிணைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நேற்று விசாரித்த நீதிபதி டி. கே. சிங், ரேங்க் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கேரள அரசு சார்பில் டிவிஷன் பெஞ்சில் அப்பீல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The post சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாதிப்பு கேரள பொறியியல் நுழைவுத் தேர்வு ரேங்க் பட்டியல் ரத்து: கேரள உயர்நீதிமன்றம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CBSE ,Kerala High Court ,Thiruvananthapuram ,Kerala ,Kerala High Court Action ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...