புதுடெல்லி: ஆழ்கடல் டைவிங் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள நிஸ்டார் கப்பல் விசாகபட்டினத்தில் இந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 10,000 டன் எடை, 118 மீட்டர் நீளமுள்ள இந்த நிஸ்டார் கப்பலில் அதிநவீன ஆழ்கடல் நீச்சல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் ஆழ்கடல் பகுதியில் 300 மீட்டர் ஆழம் வரை சென்று பணிகளை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நீர்மூழ்கி கப்பலில் அவசர சூழ்நிலை ஏற்படும்போது, அதிலுள்ள பணியாளர்களை பாதுகாப்பாக மீட்டு வௌியேற்றும் விதமாகவும், ஆழ்கடலில் மூழ்கி செல்ல கூடிய வகையிலும், 1,000 மீட்டர் ஆழம் வரை கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிஸ்டார் கப்பல் உதவும். இந்த கப்பல் கடந்த 8ம் தேதி விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
The post நீர்மூழ்கியில் சிக்கியவர்களை மீட்கும் நிஸ்டார் கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.
