×

குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து: 4 பேர் பலி

காந்திநகர்: குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பீரா பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததில், அதில் சென்றுகொண்டிருந்த லாரி மற்றும் கார் கீழே உள்ள மாஹி நதியில் மூழ்கியது. முறையான பராமரிப்பு இல்லாததே இந்தப் பால விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

The post குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து: 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Gandhinagar ,Gambira bridge ,Vadodara district of ,Mahi river ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...