- சீனா
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- சிந்து நடவடிக்கை
- பெய்ஜிங்
- இந்திய இராணுவம்
- துணைத் தலைமை லெப்டினன்ட் ஜெனரல்
- ராகுல் ஆர். சிங்
- துருக்கி

பெய்ஜிங்: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பேசிய இந்திய ராணுவத்தின் துணைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர்.சிங் கூறும்போது,’ எல்லையில் நாம் ஒரே நேரத்தில் 3 எதிரிகளை எதிர்கொண்டோம். பாக்.கை நேரடியாக எதிர்கொண்டால், சீனா, துருக்கி ஆகிய நாடுகள் பின்புலமாக போரில் நின்றன. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பல்வேறு ஆயுத அமைப்புகளை சோதிக்க இந்த மோதலை ஒரு நேரடி ஆய்வகமாக சீனா பயன்படுத்தியது’ என்றார்.
இதற்கு நேற்று சீனா பதில் அளித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில்,’ இந்தியா குறிப்பிட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. சீனாவும், பாகிஸ்தானும் பாரம்பரிய நட்புள்ள நெருங்கிய அண்டை நாடுகள் என்று நான் கூற விரும்புகிறேன். பாதுகாப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இயல்பான ஒரு பகுதியாகும். மேலும் எந்த மூன்றாம் தரப்பினரையும் நாங்கள் குறிவைக்கவில்லை.
அதே நேரத்தில், இந்தியா-சீனா உறவு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான முக்கியமான தருணத்தில் உள்ளது. இருதரப்பு உறவுகளின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க சீனா விரும்புகிறது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு பாடுபட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வேறுபாடுகளை முறையாகத் தீர்த்து வைப்பதிலும், பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் அடிப்படைத் தீர்வுகளைத் தேடுவதிலும் சீனா வரவேற்கிறது, ஆதரிக்கிறது. இந்த நோக்கத்திற்காக ஆக்கபூர்வமான பங்கை தொடர்ந்து வகிக்க சீனா தயாராக உள்ளது’ என்றார். தலாய் லாமாவின் 90வது பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
The post ஆபரேஷன் சிந்தூரில் பாக்.கிற்கு உதவி இந்தியா கருத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.
