×

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய தாமதம் ஏன்?சந்திரசூட் விளக்கம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய தாமதம் ஏன் என்பது குறித்து சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2022 நவம்பர் முதல் 2024 நவம்பர் வரை பதவி வகித்தார். இவரது பதவி முடிந்து 8 மாதமாகிய நிலையிலும், தற்போதும் தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே தொடர்ந்து தங்கி உள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திருத்த விதிகள் 2022 பிரிவு 3பி படி, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அதிகாரப்பூர்வ இல்லத்தில் அதிகபட்சம் 6 மாதங்கள் வரையிலும் தங்கியிருக்கலாம். சந்திரசூட்டுக்குப் பிறகு தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணா மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இருவரும் ஏற்கனவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவிலேயே தொடர்வதாக கூறி விட்டனர். தற்போது ஜூன் 30 வரையிலும் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் இந்த கூடுதல் அவகாசம் முடிந்த பிறகும் சந்திரசூட் அதே பங்களாவில் வசிக்கிறார். இதுதொடர்பாக சந்திரசூட்டிற்கு ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு கடந்த 1ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளது. இது சர்ச்சையான நிலையில் தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து சந்திரசூட் கூறியதாவது:
நாங்கள் உண்மையில் எங்கள் சாமான்களை பேக் செய்துவிட்டோம். சில சாமான்கள் ஏற்கனவே புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன, மேலும் சில இங்கே ஸ்டோர்ரூமில் வைக்கப்பட்டுள்ளன.

காலதாமதம் தொடர்பாக நான் குறிப்பிட விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், நாங்கள் பிரியங்கா மற்றும் மஹி என்ற இரண்டு குழந்தைகளின் பெற்றோர். அவர்கள் சிறப்பு குழந்தைகள், அவர்களுக்கு சிறப்புத் தேவைகள் உள்ளன. அவர்களுக்கு நெமலின் மயோபதி என்ற ஒரு நிலை உள்ளது. உங்களுக்குத் தெரியும், இது எலும்புக்கூடு தசைகளைப் பாதிக்கும் மிகவும் அரிதான மரபணு கோளாறு. அவர் வசதிக்காக புதிய வீட்டில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. அந்த மாற்றங்கள் செய்யும் பணி நடக்கிறது. அந்த வீடு தயாரானதும் அதிகபட்சம் ஒரு சில வாரங்களுக்குள் நாங்கள் அங்கு சென்று விடுவோம் இவ்வாறு தெரிவித்தார்.

The post உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய தாமதம் ஏன்?சந்திரசூட் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Justice of the Supreme Court ,Chandrachud ,New Delhi ,Chief Justice of the ,Supreme Court ,D.Y. Chandrachud ,50th ,Chief Justice of the Supreme ,Court ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்