- திருப்பூர் தமிழர்கள்
- திண்டுக்கல் டிராகன்ஸ்
- TNPL
- திண்டுக்கல்
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- சாய் கிஷோர்…
- தின மலர்
திண்டுக்கல்: தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) போட்டியின் 9வது தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று திருப்பூர் தமிழன்ஸ், நடப்பு சாம்பியன், திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளன. தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) போட்டியின் 9வது தொடரில், ஆல்ரவுண்டர் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும், மற்றொரு ஆல்ரவுண்டர் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், லீக் சுற்றின் முடிவில் முறையே 2, 3வது இடங்களை பிடித்தன. லீக் சுற்றில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் முதல் இடம் பிடித்த சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை திருப்பூர் அணி முதல் தகுதிச் சுற்றில் வீழ்த்தியது. அதனால் முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது. லீக் சுற்றில் 3, 4 வது இடங்களை பிடித்த திண்டுக்கல், திருச்சி சோழாஸ் அணிகள் நாக் அவுட் சுற்றான வெளியேறும் சுற்றில் மோதின. அதில் வென்ற திண்டுக்கல் 2வது தகுதிச்சுற்றில் சேப்பாக்கம் அணியுடன் மோதியது. அதில் சேப்பாக்கம் மீண்டும் தோல்வியை தழுவியதால் வெளியேறியது. வெற்றி பெற்ற திண்டுக்கல் இன்று இறுதி ஆட்டத்தில் திருப்பூர் அணியை சந்திக்கிறது.
நேருக்கு நேர்
* டிஎன்பிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் திண்டுக்கல் 5, திருப்பூர் ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளது.
* நடப்புத் தொடரில் ஜூன் 8ம் தேதி நடந்த 5வது லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் கடைசியாக மோதின. அப்போட்டியில், திருப்பூர், 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தியது.
* நடப்புத் தொடரில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள திருப்பூர் 6 வெற்றி, 2 தோல்விகளை சந்தித்துள்ளது.
* திண்டுக்கல் 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளை பெற்றுள்ளது.
* இப்போது 9வது தொடரில் விளையாடும் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் 4வது முறையாக இறுதி ஆட்டத்தில் களம் காண உள்ளது.
* திருப்பூர் அணியிலும் தொடர்ந்து 9வது தொடரில் விளையாடினாலும், இந்த முறைதான் முதல் முறையாக பைனலில் களம் காண காத்திருக்கிறது.
* எனவே இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வென்றால் திருப்பூர் முதல் முறையாகவும், திண்டுக்கல் தொடர்ந்து 2வது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை பெறும்.
The post டிஎன்பிஎல் இறுதிச் சுற்றில் இன்று திருப்பூர் தமிழன்ஸ் திண்டுக்கல் டிராகன்ஸ்: வெற்றி கோப்பை யாருக்கு? appeared first on Dinakaran.