×

கேதார்நாத் பாதையில் நிலச்சரிவு 2 பேர் பலி, 3 பேர் படுகாயம்

ருத்ரபிரயாக்: உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற சிவதலமாகும் கேதார்நாத். இது சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கேதார்நாத்துக்கு செல்கின்றனர். இந்த நிலையில், ஜங்கிள்சாட்டி மலையேற்ற பாதையில் நேற்று காலை 11.20 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்,2 பக்தர்கள் பலியானார்கள்.3 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்கள் யார், அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மலையேற்ற பாதையில் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

The post கேதார்நாத் பாதையில் நிலச்சரிவு 2 பேர் பலி, 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kedarnath ,Shiva ,Uttarakhand ,Lord Shiva ,Jungle Chatti ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்