×

சாலை, பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுகோள்

 

அவிநாசி, ஜூன்13: அவிநாசியில் மாநில நெடுஞ்சாலை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என அவிநாசி நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அவிநாசி நகராட்சிக்கு உட்பட்ட, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் வைத்துள்ளவர்கள் தாங்களே முன்வந்து 3 தினங்களுக்குள் அகற்ற வேண்டும் அகற்றாவிட்டால் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் நகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகையை சம்மந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என அவிநாசி நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் அறிவித்துள்ளார்.

The post சாலை, பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Avinashi ,Avinashi Municipal Administration ,Municipal Commissioner ,Venkateswaran ,Dinakaran ,
× RELATED 250 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவது குறித்து எம்.எல்.ஏ ஆய்வு