தாராபுரம், ஜன.1: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மனக்கடவு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ். தொழிலாளி. இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவருக்கு நாகவிக்னேஷ் (23) என்ற மகனும், 21 வயது மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் மனகடவு அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகின்றனர். நாக விக்னேஷ் கடந்த 6 மாதமாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 30ம் தேதி இரவு நாக விக்னேஷ் தனது தாய் பாக்கியலட்சுமியிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் தரமறுத்ததால் ஆத்திரமடைந்த நாக விக்னேஷ் தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாக விக்னேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
