×

பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு; திருப்பூரில் தக்காளி ரூ.50-க்கு விற்பனை

திருப்பூர், ஜன. 1: திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள தென்னம்பாளையம் சந்தைக்கு அவிநாசிபாளையம், பொங்கலூர், பல்லடம், அல்லாளபுரம், குண்டடம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து விவசாயிகள் தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மேலும் கர்நாடகா, ஆந்திரா பகுதிகளிலும் இருந்தும் தக்காளி கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து அதிகமாக இருந்ததன் காரணமாக விலை குறைந்து சில்லறை விற்பனையில் 4 முதல் 6 கிலோ வரையிலான தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்ததால் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் 15 கிலோ டிப்பர் ரூ.600 முதல் 800க்கும், சில்லறை விற்பனையில் தரத்திற்கேற்ற வகையில் ரூ.45 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து தக்காளி வியாபாரிகள் கூறுகையில், கடந்த 2 வாரங்களாகவே பனிப்பொழிவு காரணமாக தக்காளி வரத்து பெருமளவு குறைந்துள்ளது. உள்ளூர் மட்டுமல்லாது வெளி மாநில தக்காளி விளைச்சல் மற்றும் வரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. பொங்கலுக்கு பின் விலைகுறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

Tags : Tiruppur ,Avinashipalayam ,Pongalur ,Palladam ,Allalapuram ,Kundadam ,Tarapuram ,Madathukulam ,Udumalai ,Thennampalayam market ,Karnataka ,Andhra Pradesh… ,
× RELATED போலீஸ்காரரை கத்தியால் குத்த முயன்ற வாலிபர்