வங்கிக் கிளை தொடங்க கோரிக்கை

வருசநாடு, ஜூன் 12: கண்டமனூர் கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டமனூர் மற்றும் அதைச் சுற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கண்டமனூர் கிராமத்தில் மட்டும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு, வரைவோலை மற்றும் பல்வேறு வங்கி சேவைகளுக்கு கண்டமனூரில் தனியார் வங்கி ஒன்று மட்டும் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் எதுவும் கிடையாது.

இதனால் இப்பகுதி மக்கள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வங்கிகள் மூலம் பெறவும் மற்றும் பள்ளி மாணவர்கள் வங்கி கணக்குகள் தொடங்குவதற்கும் 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையை நிறுவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வங்கிக் கிளை தொடங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: