×

ரூ.24 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

ஓசூர், ஜூன் 12: ஓசூர் சட்டமன்ற தொகுதி, சென்னசந்திரம் கிராமத்தில், ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.24.26 லட்சம் மதிப்பில் புதிதாக தார்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா, ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, துணை செயலாளர் ரமேஷ், மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணப்பா, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.24 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Union General Fund ,Chennasandram ,Western District DMK ,Prakash MLA ,Dinakaran ,
× RELATED வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்