×

ஆர்சிபி அணி ரூ.17ஆயிரம் கோடிக்கு விற்பனையா?

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுக்கு பின்னர் இந்த ஆண்டு 18வது சீசனில் முதன்முறையாக பட்டம் வென்றது. இந்த வெற்றியை கொண்டாட பெங்களூருவில்நடந்தவிழாவில் திரண்ட ரசிகர்களில் 11பேர் நெரிசலில் சிக்கி பலியாகினர். இதனால் பெரும் சர்ச்சை உருவாகி உள்ளது.

ஆர்சிபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஆர்சிபி அணியை 17,128 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய டியாஜியோ இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவ்வாறு திட்டம் எதுவும் இல்லை என அந்த நிறுவனம் மறுத்துள்ளது.

 

The post ஆர்சிபி அணி ரூ.17ஆயிரம் கோடிக்கு விற்பனையா? appeared first on Dinakaran.

Tags : RCP ,Bangalore ,RoyalChallengers ,IPL ,Dinakaran ,
× RELATED சீரி ஏ கால்பந்து பைசாவை வீழ்த்தி ஜுவன்டஸ் அபாரம்