பூண்டி ஊராட்சியில் 575 தொகுப்பு வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு ஆணை: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 575 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகளை கட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் பி.வெங்கட்ரமணா தலைமை வகித்தார். ஒன்றியக் குழு துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, சித்ரா பெர்னாண்டோ, மேலாளர் (நிர்வாகம்) பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பூண்டி, நெய்வேலி, கைவண்டூர், அல்லிக்குழி, சென்றயான்பாளையம், பட்டரைபெருமந்தூர், மோவூர் உள்பட 23 ஊராட்சிகளில் 575 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி (எ) அன்பரசு, மாவட்ட இளைஞரணி தலைவர் தா.மோதிலால், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மஞ்சு லிங்கேஸ், ரெஜிலா மோசஸ், சுபாஷினி பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்யநாராயணன், சித்ரா ரமேஷ், அருணா யுவராஜ், கருணாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

The post பூண்டி ஊராட்சியில் 575 தொகுப்பு வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு ஆணை: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: