×

சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி, புனே விமானம் திடீர் ரத்து

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி மற்றும் புனே விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று காலை 6 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கும் செல்லும் தனியார் பயணிகள் விமானங்கள், அதேபோல், புனேவில் இருந்து நேற்று அதிகாலை 4.25 மணிக்கு சென்னை வரும் தனியார் விமானம், தூத்துக்குடியில் இருந்து நற்று மதியம் 1.45 மணிக்கு, மாலை 6.30 மணிக்கு சென்னை வரும் தனியார் விமானங்கள் என 5 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. நிர்வாக காரணங்களுக்காக இந்த 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் 5 விமானங்கள் திடீர் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

The post சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி, புனே விமானம் திடீர் ரத்து appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Pune ,Chennai airport ,Chennai ,Chennai domestic ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...