×

விஜய் தனித்து நிற்பது நல்லது எச்.ராஜா அட்வைஸ்

மதுரை: நடிகர் விஜய் தனித்து போட்டியிடுவது நல்லது என எச்.ராஜா கூறியுள்ளார். பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நாட்டிற்கு எதிராக செயல்படுவதை ராகுல்காந்தி வழக்கமாக கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளது. யார், யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? நடிகர் விஜய் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது நல்லது. அவர் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம்’’ என்று தெரிவித்தார்.

The post விஜய் தனித்து நிற்பது நல்லது எச்.ராஜா அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : H.Raja ,Vijay ,Madurai ,Former ,BJP ,national secretary ,Rahul Gandhi ,Pakistan ,India ,Pakistan.… ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...