×

ஆயிரம் அமித்ஷா, மோடி வந்தாலும் திமுக கூட்டணியை பாதிக்காது: இந்திய கம்யூனிஸ்ட் உறுதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப் வழங்கியதை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அரசியலாக்கி வருகிறார். திமுக தோல்வி பயத்தில் இல்லை. எடப்பாடி தான் தோல்வி பயத்தில் உள்ளார். தற்போது வழங்கி உள்ள ஓய்வூதிய திட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் சிறப்பானது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக உரிமைக்காக போராடுகிறார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூடுதல் இடம் கேட்கும் தார்மீக உரிமை எங்களுக்கு உண்டு. அதை முதல்வர் தவறாக நினைக்க மாட்டார். அதேவேளையில் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.

பாஜ வெற்றி பெறும் மாநிலங்களில் ஜனநாயகம் இல்லை. மாநில அரசுக்கு, ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை தந்தால் மக்களுக்கு இன்னும் அதிகமாக முதல்வர் வழங்குவார். இது தான் மக்களுக்கான அரசு. தமிழகத்துக்கு ஆயிரம் அமித்ஷா, மோடி வந்தாலும் திமுக கூட்டணியை பாதிக்காது. தமிழ் கலாசாரத்தை கெடுக்க பாஜ முயற்சிப்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். விஜய்க்கு கூட்டம் கூடலாம். மக்கள் நலம் சார்ந்து அரசியல் செய்தால் தான் மக்கள் ஏற்றுக்கொள்வர். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Amitsha ,Modi ,Dimuka ,Communist ,Mailadudhara ,State ,Weerabandian ,Palanisami ,Tamil Nadu government ,
× RELATED சொல்லிட்டாங்க…