×

மழையால் வீடு இடிந்து உயிர் தப்பிய முதிய தம்பதியினர்

ராசிபுரம், மே 21: ராசிபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக முதிய தம்பதி உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஆனந்தகவுண்டம் பாளையம், கொல்லங்காடு பகுதியில் வசித்து வருபவர் செங்கோடன்(80). விவசாயியான இவரது மனைவி பெருமாயி(72). இந்நிலையில், வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதியில் தொடர்சியாக பெய்த கோடை மழையால், இவர்களது வீட்டின் சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. சுவர் விழும் சத்தம் கேட்டு இருவரும் சுதாரித்துக் கொண்டு வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் பாதுகாப்பாக தங்க வைத்தனர். இது குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மழையால் வீடு இடிந்து உயிர் தப்பிய முதிய தம்பதியினர் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Sengodan ,Kollankadu ,Anandakoundam Palayam ,Vennandur ,Namakkal district ,
× RELATED பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் காயம்