பாலக்கோடு, மே 16: பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 26 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 1999ம் ஆண்டு படித்த மாணவிகள் 26 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் ஒன்றாக சந்தித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் பணியாற்றி வருவதையும், தங்கள் அனுபவங்களையும், குடும்பங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களான சுசீலா, கிருஷ்ணம்மாள், ஜெயசீலன் மற்றும் தலைமை ஆசிரியர் பழனிசாமி ஆகியோரிடம் ஆசி பெற்றனர். பள்ளிக்கு இரும்பு பீரோவை பரிசாக அளித்தனர். இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் மற்றும் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
The post அரசு பள்ளி முன்னாள் மாணவிகள் சந்திப்பு appeared first on Dinakaran.
