தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் கனமழை பெய்யக்கூடும்.

இன்று (மே.15) நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் நாளை (மே.16) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் (மே.17) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: