இந்நிலையில். அந்த தேடுதல் குழுக்கள் புதிய துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபர்களை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக அவற்றுக்கு ஆகஸ்ட் 13ம் தேதி காலஅவகாசம் வழங்கி உயர்கல்வித்துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித்தனி அரசாணைகளை அவர் வெளியிட்டுள்ளார். இந்த தேடுதல் குழு ஒவ்வொன்றும் துணைவேந்தர் பதவிக்கு 3 பேர்களை தேர்வுசெய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும்.
அதில் ஒருவரை தமிழக அரசு, துணைவேந்தராக தேர்வுசெய்யும். முன்பு தேடுதல் குழு 3 பேர் அடங்கிய பட்டியலை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் சமர்ப்பிக்கும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் துணைவேந்தரை தேர்வுசெய்வார். தற்போது பல்கலைக்கழகத் துணைவேந்தரை தமிழக அரசே தேர்வுசெய்யும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதால் ஆளுநருக்கு பதிலாக தமிழக அரசே புதிய துணைவேந்தரை தேர்வுசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 4 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுக்களுக்கு காலஅவகாசம்: உயர்கல்வி துறை உத்தரவு appeared first on Dinakaran.
