×

பாண்டுரங்க சுவாமி கோயில் தேர்த்திருவிழா

தேன்கனிக்கோட்டை, மே 13: தேன்கனிக்கோட்டை 12வது வார்டு காந்தி ரோட்டில் அமைந்துள்ள ருக்மணி சமேத பாண்டுரங்க சுவாமி கோயிலில், 3ம் ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 10ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. மகா கணபதி பூஜை, ருக்மணி சமேதா பாண்டுரங்க சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பாண்டுரங்க சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ருக்மணி சமேத பாண்டுரங்க சுவாமி உற்சவ மூர்த்திகளை அமர்த்தி தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து பாண்டுரங்கா, விட்டலா என கோஷமிட்டபடி இழுத்தனர். ராஜாஜி தெரு, எம்.ஜி.ரோடு, நேரு தெரு வழியாக தேர் கோயிலை வந்தடைந்தது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

The post பாண்டுரங்க சுவாமி கோயில் தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Panduranga Swamy Temple Chariot Festival ,Thenkani ,Kottai ,Chithirai festival ,Rukmani Sametha Panduranga Swamy Temple ,Gandhi Road, Ward 12 ,Thenkani Kottai ,Maha Ganapathi Puja ,Rukmani Sametha Panduranga Swamy… ,
× RELATED 700 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்