×

1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

சேந்தமங்கலம், மே 13: சேந்தமங்கலம் ஒன்றியம், வாழவந்திகோம்பை ஊராட்சி காரவள்ளியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் தலைமை வகித்து, கொல்லிமலை ஒன்றியம் தேவனூர் நாடு, வளப்பூர்நாடு, வாழவந்திநாடு ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் கூலி தொழிலாளர்களுக்கு சேலை, சில்வர் தட்டு ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் முன்னாள் பேரூர் செயலாளர் ராஜேந்திரன், கொண்டமநாயக்கன்பட்டி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஸ்ரீபாலன், நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ சிவக்குமார், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் ராஜா, அதிமுக நிர்வாகிகள் நாச்சிப்புதூர் குமார், விஜி, சரவணன், ரவிச்சந்திரன், குணாஉமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Karavalli ,Vazhavanthikombai Panchayat ,Senthamangalam Union ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,MLA ,Senthamangalam Chandrasekaran ,Kollimalai Union Devanur… ,
× RELATED பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் காயம்