×

ரூ.55 லட்சம் மதிப்பில் குழந்தைகள் பூங்கா அமைப்பு

திருச்செங்கோடு, மே 13: மல்லசமுத்திரம் பேரூராட்சியில் ரூ.55 லட்சம் மதிப்பில் திருநகர் காலனி பகுதியில் குழந்தைகள் பூங்கா அமைக்கப்பட்டது. இதனை ஈஸ்வரன் எம்எல்ஏ மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து பேரூராட்சி சார்பில் குப்பைகள் சேகரிக்க தலா ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 5 பேட்டரி ஆட்டோக்களும், இரண்டு மினி சரக்கு வாகனங்கள் தருவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணியை ஈஸ்வரன் எம்எல்ஏ மற்றும் மாவட்ட திமுக பொறுப்பாளர் கே எஸ் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மல்லசமுத்திரம் பேரூர் திமுக செயலாளர் திருமலை தலைமை வகித்தார். பின்னர் மல்லசமுத்திரம் பஸ் நிலையத்தில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, மாம்பழம், வெள்ளரி ஆகியவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மூவேந்தர பாண்டியன், அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.55 லட்சம் மதிப்பில் குழந்தைகள் பூங்கா அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Thirunagar Colony ,Mallasamuthiram Town Panchayat ,Easwaran MLA ,Namakkal West District DMK ,K.S. Murthy ,
× RELATED பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் காயம்