×

பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

 

அந்தியூர்,மே12: அந்தியூர் அடுத்த உள்ள பர்கூர் மலைப்பாதை ரோட்டில் ஆந்திர மாநிலம் விஜயநகரிலிருந்து மதுரைக்கு பெயிண்ட் ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது. இதனை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரியநாகிபுரத்தை சேர்ந்த சையது ஷேக் முகைதீன்(50) ஓட்டி வந்தார். பர்கூர் மலை வழியாக வரட்டுப்பள்ளம் அணை ‘வியூ’ பாயிண்ட் அருகே நேற்று காலை வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இடதுபக்கம் கவிழ்ந்தது.

இதில் டிரைவர், கிளீனர் காளிதாசன்(34) லேசானகாயத்துடன் தப்பினர். பர்கூர் போலீசார் லாரியை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தியூரில் இருந்து பர்கூர் மலை பாதை வழியாக கர்நாடக செல்லும் ரோட்டின் ஓரத்தில் லாரி கவிழ்ந்த விபத்தால எந்த விதமான போக்குவரத்து பாதிப்பும் ஏற்படவில்லை.

The post பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Bargur Hill Road ,Anthiyur ,Vijayanagar, Andhra Pradesh ,Madurai ,Syed Sheikh Mujideen ,Peravuorani Periyanagipuram ,Thanjavur district ,Bargur Hill… ,Lorry ,
× RELATED வணிக ரீதியிலான இயந்திரம் வாங்க பெண்களுக்கு 50 சதவீதம் மானியம்