×

தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

 

புழல்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை நிறைவு விழா முன்னிட்டு செங்குன்றம் பேரூராட்சி துணை தலைவரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான விப்ர நாராயணன் ஏற்பாட்டில், செங்குன்றம் ஜீவானந்தம் தெருவில் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், 500 பேருக்கு மதிய உணவு வழங்கும் விழா நடந்தது.

இதில், பேரூராட்சி துணை தலைவர் விப்ர நாராயணன், புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் வடகரை அற்புதராஜ், செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் ஆகியோர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுச்வை உணவு வழங்கினர். இந்நிகழ்வில், புழல் ஒன்றிய திமுக, செங்குன்றம் பேரூர் திமுக நிர்வாகிகள், பேரூராட்சி முன்னாள் மற்றும் இந்நாள் கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கல் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,DMK government ,Sengunram Town Panchayat ,Vice President ,DMK ,Vipra Narayanan ,Sengunram Jeevanandam Street… ,
× RELATED பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் பிரிவு...