கும்மிடிப்பூண்டி, ஜன.6: கும்மிடிப்பூண்டி அடுத்த பிரித்வி நகர் பகுதியில் மஸ்தான்(40) என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் வடமாநில வாலிபர் ஒருவர் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், காய்கறி கடைக்கு வந்த இளைஞர்கள் சிலர் வடமாநில வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து மஸ்தான் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சரவணன்(50), சுரேஷ்(47), நேதாஜி(28), பிரசாந்த்(24) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
