×

கிரிக்கெட் விளையாட சென்ற தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து பலி

 

ஆவடி, ஜன.6: திருவள்ளூர் மாவட்டம், வண்டி காவனூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன்(34). பெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா(30). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்நிலையில், லோகேஸ்வரன் நேற்று முன்தினம் மாலை ஆலத்தூர், தும்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றார். அப்போது, உடல்நிலை பாதித்து மைதானத்தில் அமர்ந்திருந்த லோகேஸ்வரன் திடீரென்று மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் லோகேஸ்வரனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், லோகேஸ்வரன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த முத்தா புதுப்பேட்டை காவல்நிலை போலீசார் லோகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Avadi ,Lokeswaran ,Perumal Koil Street, Vandi Kavanur, Thiruvallur district ,Perambudur ,Ramya ,Lokeswaran… ,
× RELATED பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் பிரிவு...