சாத்தான்குளத்தில் கழிவுநீர் ஓடையில் சிக்கிய ஆடு

சாத்தான்குளம், மே 6:சாத்தான்குளம் புது வேதக்கோவில் தெரு பகுதி புறவழிச்சாலையாக செயல்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக புதிய பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இந்த சாலை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குழாய் பதிக்க தோன்றியபோது சேதமான சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து சென்றதையடுத்து மீண்டும் சாலை தோண்டி கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதனால் இங்குள்ள கழிவுநீர் ஓடை மூடியும் உடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் சாக்கடை கால்வாயில் ஆடு ஒன்று தவறி விழுந்து வெளியேற முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து இப்பகுதி மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய சிறப்பு அலுவலர் ஹாரிஸ் தாமஸ் செல்வபாபு தலைமையில் வீரர்கள் சதீஷ்குமார், சுரேஷ்குமார், மாரிமுத்து, வைகுண்டம் ஆகியோர் விரைந்து வந்து கழிவுநீர் ஓடையில் சிக்கி தவித்த ஆட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இப்பகுதியில் சேதமடைந்து காணப்படும் கழிவுநீர் ஓடையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.

The post சாத்தான்குளத்தில் கழிவுநீர் ஓடையில் சிக்கிய ஆடு appeared first on Dinakaran.

Related Stories: