×

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

கிருஷ்ணகிரி, மே 6: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போச்சம்பள்ளி தாலுகா, வடமலம்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை (7ம்தேதி) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில், மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு அவரவர் துறைகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கவுரையாற்ற உள்ளனர். மேலும், கலெக்டர் தினேஷ்குமார் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற உள்ளார். எனவே, பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்கள் தொடர்பு திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Relations ,Project ,Krishnagiri ,Krishnagiri district ,Vadamalampatti ,Pochampally taluka ,Public Relations Project ,Camp ,Dinakaran ,
× RELATED 700 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்