×

பூத்துக்குலுங்கும் கனகாம்பர பூக்கள்

ராயக்கோட்டை, மே 6: ராயக்கோட்டை பகுதியில், கனகாம்பரம் பூவை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் முகூர்த்தங்கள் அதிகமாக இருந்ததால், கனகாம்பரம் பூ கிலோ ரூ.600க்கும் அதிகமாக விற்பனையானது. இந்த மாதம் முகூர்த்தங்கள் இருந்தும், அக்னி நட்சத்திரம் என்பதால் முகூர்த்தங்களை நடத்துவதில்லை. அதனால் பூக்களின் விலை குறைந்து, குண்டுமல்லி மற்றும் கனகாம்பரம் கிலோ ரூ.200 வரை விற்பனையாகி வருகிறது. அதை பறித்து விற்றாலும், பறிப்பதற்கான கூலி கூட கிடைக்காது என்பதால், விவசாயிகள் பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு வைத்துள்ளனர். தற்போது கோயில் திருவிழாக்கள் நடந்து வருவதால், விலை அதிகரிக்கும் என்பதால் கனகாம்பரம் பூவை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு வைத்திருப்பதால், செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

The post பூத்துக்குலுங்கும் கனகாம்பர பூக்கள் appeared first on Dinakaran.

Tags : RAYAKOTTA ,RAYAKKOTA AREA ,
× RELATED 700 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்